மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பாதுகாப்புக்கான 4 நட்சத்திர ரேட்டிங்!

சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஜீப் கிராஷ் டெஸ்டில் பாதுகாப்பு தர நிலைக்கான பரிசோதனையில் 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது. Global NCAP என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் பாதுகாப்பு…

சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஜீப் கிராஷ் டெஸ்டில் பாதுகாப்பு தர நிலைக்கான பரிசோதனையில் 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Global NCAP என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் பாதுகாப்பு தொடர்பான தர நிர்ணயம் குறித்த ரேட்டிங்கை பரிசோதனையின் அடிப்படையில் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு புதிய மஹிந்திரா தார் ஜீப்பை கிராஷ் டெஸ்டின் (மணிக்கு 64 கிமீ வேகம்) மூலம் பரிசோதித்து அது குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இரண்டு வகையிலும் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கியுள்ளது.

இந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்பான கார்களுள் ஒன்றாக மஹிந்திரா தார் மாறியுள்ளது. முன்னதாக மஹிந்திராவின் XUV300 மாடலும் 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தாருக்கு 4 நட்சத்திர ரேட்டிங் கிடைத்ததையடுத்து இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு மேலும் அதிகரிக்கும் என நம்பலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply