தொடர் திருவிழாக்களால் உயரும் கேந்தி பூக்களின் விலை – விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதிகளில் ‘கேந்தி பூக்கள்’ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மல்லிகை, பிச்சி, வாடாமல்லி, கேந்தி மற்றும்…

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதிகளில் ‘கேந்தி பூக்கள்’ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மல்லிகை, பிச்சி, வாடாமல்லி, கேந்தி மற்றும் சம்பங்கி போன்ற பல்வேறு ரக பூக்களை அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர்.

கோடை காலங்களில் பெரும்பாலும் திருவிழாக்கள், சுபமுகூர்த்தங்கள், திருமணங்கள் ஏராளமாக நடைபெறும்.இந்த குறிப்பிட்ட காலத்தில் பூக்களின் வரத்தும்,அவற்றின் விலையும் கூடுதலாகவே இருக்கும்.

கேந்தி பூக்கள் கடந்த சில வாரங்களாககிலோ 30 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்தது. மேலும், தற்போது தொடர் முகூர்த்தம் மற்றும் திருவிழா நாட்கள் அதிகம் நடப்பதால், கேந்தி பூக்களின் விலை தற்போது 80முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.