தாராபுரம் அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்டம் இன்று வெகு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்ட
விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்தகோயிலில் ஆண்டுதோறும் 10 பத்து நாட்களுக்கு கொடி ஏற்றப்பட்டு தினசரி அனுமந்தராய சுவாமி மற்றும் ராமர் சீதை, ராகவேந்திரர் ஆகிய சுவாமிகளுக்கு பல வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடை பெறும்.

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செல்வதுண்டு. 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

மேலும் கோயிலில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிட்ட பிறகு சுவாமியிடம் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சாப்பிட்ட இலையில் படுத்து உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.