கர்நாடகாவில் பாஜக எதிர்ப்பு அலை வீசி வருவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின் போது, நியூஸ்7 தமிழ் சிறப்பு செய்தியாளர் வசந்திக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாபெரும் அலை வீசுகிறது. காங்கிரசின் வெற்றி இந்தியாவிற்கே ஒரு தேவையாக மாறியிருக்கிறது. எப்படி பாஜகவிற்கு எதிரான அலையில் தமிழ்நாடு இருக்கிறதோ அதே போல கர்நாடகத்திலும் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கி இருக்கிறது. ஆனால் பாஜக பிளவுபடுத்தும் முயற்சியிலே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது எனவும் எம்பி ஜோதிமணி தெரிவித்தார்.
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, நியூஸ் 7 தமிழின் சிறப்பு செய்தியாளர் வசந்தி நடத்திய கலந்துரையாடலை முழு வீடியோவாக காண…








