தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமையும் செல்வாக்கும் அதிமுகவுக்கு உள்ளது; அமைச்சர் பாண்டியராஜன் கருத்து!

தமிழகத்தில் தனித்தே ஆட்சி அமைக்கும் வல்லமையும் மக்கள் செல்வாக்கும் அதிமுகவுக்கு உள்ளது என்று தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள்…

தமிழகத்தில் தனித்தே ஆட்சி அமைக்கும் வல்லமையும் மக்கள் செல்வாக்கும் அதிமுகவுக்கு உள்ளது என்று தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை பிடித்து தனித்தே ஆட்சி அமைக்கும் என கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply