தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல 9 மாதங்களுக்கு பின், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்கள், கோவில்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவலின் தீவிரம் குறைந்ததையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடவும், சுற்றுலா பயணிகளுக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வர தொடங்கினர்.







