”டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதல்வர் விளங்குகிறார்”- அமைச்சர் காமராஜ்!

எப்போதும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதலமைச்சர் விளங்குகிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் சேவையை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து…

எப்போதும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதலமைச்சர் விளங்குகிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் சேவையை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செயல்படுத்திய அம்மா உணவகத்தை போன்றே
தற்பொழுது முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் மக்களுடைய தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாராட்டியுள்ளார்.

புயல் வெள்ளத்தால் டெல்டா மாவட்டம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டே தமிழக முதல்வர் பழனிசாமி, பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கார்டுக்கு தலா ரூ.2,500 ரூபாய் பணம் வழங்குவதாக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்ற முதலமைச்சராகவே பழனிசாமி விளங்குகிறார் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply