நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்தார். குறிப்பாக. தற்போது பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற இவரின் கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் நடிகை சித்ரா, சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் மறைவு செய்தி கேட்ட ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.







