சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் 64வது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கரின்…

சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சட்டமேதை அம்பேத்கரின் 64வது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கரின் எண்ணங்களும், லட்சியங்களும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து பலத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேபோல, அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கரின் அடிச்சுவடுகளை பின்பிற்றி பட்டியலினத்து மக்களுக்காக பாஜக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அமித் ஷா கூறியுள்ளார்.

இதனிடையே சென்னையில் ஆளுநர் மாளிகையில், அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கரின் உருவப் படத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply