கோடநாடு வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் 2வது குற்றவாளியாக கருதப்படும், வாளையார் மனோஜ் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்த, காவல்துறை மற்றும் அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே, கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது தொடர்பான வழக்கும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனகராஜின் உறவினரான ரமேஷிடம் காவல்துறையினர் ஐந்து நாட்கள் விசாரணை நடத்த நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.