கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் மெல்லமெல்ல கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய்த்தொற்றை அதிகரிக்காமல்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் மெல்லமெல்ல கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய்த்தொற்றை அதிகரிக்காமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வருகிற 26ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முக ஆலோசனை நடத்தவுள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு நிலங்களை வரன்முறைப்படுத்துதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு காப்பீடு திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply