கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி செவிலியர்!

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, படிக்கும் வயதிலேயே, தனது கால்களை இழந்து மன தைரியத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு கொரோனா சிகிச்சை பரிவில் பணியாற்றி வருகிறார், மாற்றுத்திறனாளி செவிலியரான தன்னம்பிக்கை நாயகி கீர்த்தனா.…

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, படிக்கும் வயதிலேயே, தனது கால்களை இழந்து மன தைரியத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு கொரோனா சிகிச்சை பரிவில் பணியாற்றி வருகிறார், மாற்றுத்திறனாளி செவிலியரான தன்னம்பிக்கை நாயகி கீர்த்தனா.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில், வசித்து வருபவர் கீர்த்தனா. இவர், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் செவிலியிராக பணிபுரிந்து வருகிறார். பிறந்தது முதலே தன் வாழ்வில் பல சோதனைகளை மட்டுமே கீர்த்தனா பார்த்து வளர்ந்துள்ளார். பிறந்து 10வது நாளிலேயே தாயை இழந்த அவர், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

தன்னுடைய 10-வது வயதில் தந்தையும் உயிரிழந்த நிலையில், தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் உறவினர் ஒருவரின் உதவியுடன், திருப்பூரில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் பயின்றபோது, அவர் மீண்டும் ஒரு சோதனையை சந்தித்தார். கல்லூரி இறுதி ஆண்டில் படித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட சிறு காயம் , நாளடைவில் புற்று நோயாக மாறியது. தன் சக்தியை மீறி செலவு செய்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறுதியில் தன் இடது காலை எடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

பல துயரத்தில் இருந்து வந்த கீர்த்தனாவுக்கு, தனியார் மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் செயற்கைக்கால் பொருத்தப்பட்டு, அங்கேயே வேலை செய்து வந்தார். இந்நிலையில், தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் பலர் உள்ள நிலையில், தானாக முன்வந்து கொரோனா நோயாளிகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறார், மாற்றுத்திறனாளியான கீர்த்தனா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.