யாரும் அவசரப்பட்டு தவறான முடிவை எடுக்காதீர்கள் என
நடிகர் மனோபாலா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை சித்ராவின் உடலை காண கீழ்பாக்கம் மருத்துவமனை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மனோபாலா, நடிகை சித்ரா மிகவும் வலிமையான பெண், சின்னத்திரையில் இது போன்று நிறைய நடக்கிறது பணிச்சுமையை நிறைய ஏற்றுக் கொள்ளாதீர்கள், பணிச்சுமை தான் மனச்சுமையையும் வேதனையும் அளிக்கிறது.
பணிச்சுமை இருந்தால் தயவுசெய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், உதவி செய்ய நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம், அவசரப்பட்டு இதுபோல முடிவு எடுக்காதீர்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது எல்லோரையும் கைகூப்பி கும்பிட்டு வேண்டிக்கொள்கிறேன் தயவுசெய்து இதுபோன்ற விபரீத முடிவுகளை நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.







