ZOOM இ-மெயில் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அலுவலக மீட்டிங் அனைத்தும் இணையம் வழியாகவே நடத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் Zoom செயலி பயன்படுத்தியே நடக்கின்றன. மாணவர்கள் முதல் ஊழியர்கள் வரை கொரோனா காலத்தில் Video Communication-க்கு இந்த செயலியையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட்டுக்கு போட்டியாக email வசதியை அறிமுகம் செய்ய Zoom நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இது அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் காலண்டர் அப்ளிகேஷனை அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.







