காணாமல் போன 4 வயது சிறுவனை வாட்ஸ்அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் பல்லாவரம் போலீசார் கண்டுபிடித்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கட்டபொம்மன் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் ராம் (30) இவருடைய மகன் அங்குஸ் குமார் (வயது 4). வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவனை நீண்ட நேரமாக அழைத்தும் பதில் ஏதும் கூறாததால் வெளியே வந்து பார்த்த பெற்றோர் சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். துரிதமாக செயல்பட்ட பல்லாவரம் உதவி காவல் ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன், காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களின் வாட்ஸ் அப்பிற்கு புகைப்படங்களை அனுப்பி சிறுவனை எதாவது பகுதியில் பார்த்தால் உடனே தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி ஒருவர் அளித்த தகவலின்படி குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. புகார் அளித்த 5 மணி நேரத்தில் குழந்தை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.







