கர்நாடகாவில் மோடி – அமித்ஷா கூட்டணிக்கு தோல்வி – கே.பாலகிருஷ்ணன்

இந்திய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ள கர்நாடக தேர்தலில் மோடி-அமித்ஷா கூட்டணி தோல்வி அடைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அலமேலுபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை…

இந்திய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ள கர்நாடக தேர்தலில் மோடி-அமித்ஷா கூட்டணி தோல்வி அடைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அலமேலுபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்
செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு பெரிய தோல்வியும், காங்கிரஸ் பெரும் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த வெற்றி பாஜகவிற்கு பின்னடைவையும், இந்திய அரசியலில் திருப்பு முனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர் போல பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு தோல்வி அடைந்துள்ளார். தற்போது மோடி அமித்ஷா கூட்டணி தோல்வி முகத்தை அடைந்து கொண்டிருப்பதாகவும், வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவினர் தோல்வியை சந்திப்பார்கள்.

விழுப்புரத்தில் வருகின்ற 16 ஆம் தேதி பட்டியலின பழங்குடி மக்கள் பாதுகாப்பு உரிமை மீட்பு மாநாடு சீத்தாராம் யெச்சுரி தலைமையில் நடைபெற உள்ளது.

தீட்சிதர்கள் குழந்தை திருமணம் விவகாரத்தில் சட்டத்தை மீறுகின்ற யாராக இருந்தாலும் கைது செய்யப்படவேண்டும். அரசியலமைப்பினை மீறுகிற நிலையில் ஆளுநர் செயல்படுகிறார். பலமுறை மனு அளித்தும் மத்திய அரசு ஆளுநரை மாற்ற நடவடிக்கை எடுக்காததால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

அமைச்சரவையில் அமைச்சர்கள் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக எடுத்து கொள்ளமுடியாது. சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அனுபவம் உள்ளவர்கள் தான் அமைச்சராக தேர்வு செய்யப்படுகின்றனர். சாதாணமாக நடைபெறுகிற சம்பவத்தை மட்டும் வைத்துகொண்டு தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்க முடியாது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.