நாடு முழுவதும் மாற்றத்திற்கான வாக்குறுதி என கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 65 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடக மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்.
Congratulations to the @INCIndia on their resounding victory in the Karnataka state elections. This is not just a victory for the state, but also a promise of change across the nation tomorrow. The outcome resonates as a beacon of hope for those who believe in secular forces. My…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 13, 2023
நாளை நாடு முழுவதும் மாற்றத்திற்கான வாக்குறுதியும் கூட. மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு இந்த முடிவு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக எதிரொலிக்கிறது. இனி வரும் அரசுக்கும் கர்நாடக மக்களுக்கும் எனது வாழ்த்துகள்! என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.








