கர்நாடகாவில் தீவிரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி, 1 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் இன்று பெரும்…

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி, 1 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் இன்று பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பெங்களூரு, மைசூர், ஹூப்ளி, தார்வாத், மங்களூர், மாண்டியா, ஹாசன், பெல்காம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தற்போது கொரோனா காலகட்டத்தில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்பது கடினமான காரியம் என்பதால், ஊழியர்கள் நிலைமையை புரிந்துகொண்டு பணிக்கு திரும்ப வேண்டும், என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply