பாரதியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரின் பாடல்களை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை, மற்றும் இனி ஒரு விதி செய்வோம், பாடல்களை மேற்கோள்காட்டினார். இன்றைய இளைஞர்களுக்கு பாரதியாரின் எழுத்துகள் உற்சாக மூட்டுகிறது என்றும், அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், பாரதியாரின் பாடல்கள், நாட்டின் பெருமையை பறைசாற்றுவதமாகவும், பிரதமர் மோடி கூறினார்.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், காணொலி வாயிலாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வலிமையான ஒன்றுபட்ட பாரதமாக, இந்தியா விளங்குவதற்கு பாரதியாரின் பாடல்கள், நமக்குத் துணை நிற்கின்றன என்றார். மேலும், அவரின் கொள்கையை கடைப்பிடிப்பதிலும், அவரை வணங்குவதிலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், முதலமைச்சர் பேசினார்.







