கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரா: அமோக விற்பனை!

தைவானில் வீணாக்கப்படும் கரும்பு சக்கையில் இருந்து ஸ்ட்ரா( Straw) தயாரிக்கப்படுகிறது.  பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை மட்காத கழிவுகள் என்பதால் நிலம் மற்றும் கடலில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில்…

தைவானில் வீணாக்கப்படும் கரும்பு சக்கையில் இருந்து ஸ்ட்ரா( Straw) தயாரிக்கப்படுகிறது. 

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை மட்காத கழிவுகள் என்பதால் நிலம் மற்றும் கடலில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் தைவானை சேர்ந்த ஸ்டார்டப் நிறுவனம் ஒன்று வீணாக கொட்டப்படும் கரும்பு சக்கையில் இருந்து ஸ்ட்ரா தயாரித்து வருகிறது. கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இதனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கரும்பு சக்கைகளை காயவைத்து பொடியாக்கி இதனை தயாரிக்கின்றனர். இது 6 மாதங்களில் மட்கும் தன்மை கொண்டது. கடலில் தூக்கி எறிந்தால் சில நிமிடங்களில் துண்டு துண்டாக உடைந்து விடும் என கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல் மற்ற பொருட்களின் கழிவுகளில் இருந்தும் எளிதில் மட்கும் பொருட்களை உருவாக்க முடியுமா என ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். ஏற்கெனவே மூங்கில் உள்ளிட்டவைகளை வைத்து தட்டு, ஸ்பூன் ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply