நடிகர் கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள்.நோட்டாவிற்கு வாக்களிப்பது போன்றதுதான் என காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொன்னமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசின் 5 ஆண்டு சாதனைகளை வைத்துதான் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி பேசுவது வெறும் மேடைப் பேச்சுத்தான் என்றும், அது நிகழ்கால அரசியலுக்கு உதவாது என்றும் கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருப்பதால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். கமலஹாசன் மதசார்பற்ற கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர், பா.ஜ.க-வுக்கு துணை போகின்ற வகையில் வாக்குகளை பிரிக்கின்ற சக்தியாக இருக்கப்போகிறாரா என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க வெற்றிப்பெறப்போகும் நிலையில் தேர்தலுக்கு பிறகு ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியலில் இருப்பாரா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் சந்தேகம் தெரிவி







