கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வருகிறேன்: இன்ஸ்டாவில் இருந்து விலகிய கஜோல் உருக்கம்!

நடிகர் கஜோலை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். அவரின் பதிவுகளுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக கஜோல் இன்று அறிவித்துள்ளார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே…

நடிகர் கஜோலை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். அவரின் பதிவுகளுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக கஜோல் இன்று அறிவித்துள்ளார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே உள்ள பதிவுகளை அவர் நீக்கியுள்ளார். அதே நேரத்தில் அவரது ட்விட்டர் கணக்கின் பயோவில் சுயவிவரங்கள் உள்ளன. எனினும் சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதற்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.

என் வாழ்க்கையில் கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வருகிறேன் என மட்டும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ரசிகர்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். சிலர் நீங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைக்ளுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

நடிகை கஜோலை இன்ஸ்டாவில் 14.4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ட்விட்டரில் 3.6 மில்லியன் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.