யார் இந்த மேக்ஸிமல்ஸ்..?? – TRANSFORMERS: RISE OF THE BEASTS விமர்சனம்

பீஸ்ட் வார்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு, ஹஸ்ப்ரோ’ஸ் பொம்மை வரிசைகளை அடிப்படையாகக் கொண்டு, புகழ்மிக்க ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர் உருவாக்கப்பட்டது. இதுவரை, இத்தொடரின் ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael…

பீஸ்ட் வார்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு, ஹஸ்ப்ரோ’ஸ் பொம்மை வரிசைகளை அடிப்படையாகக் கொண்டு, புகழ்மிக்க ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர் உருவாக்கப்பட்டது. இதுவரை, இத்தொடரின் ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael Bay) இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த ஆறாவது படமான ‘பம்பல் பீ (Bumblebee)’ படத்தை மைக்கேல் பே தயாரிக்க, அப்படத்தை ட்ராவிஸ் நைட் இயக்கினார்.

இத்தொடரில் 7 ஆவது பாகமாக என்ரிக் செடியாக் ஒளிப்பதிவில், ஜாங்னிக் பான்டெம்ப்ஸ் இசையில், ‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ எனும் திரைப்படம், பம்பல் பீ படத்தின் தொடர்ச்சிக் கதையாக ஸ்டீவன் கேப்பிள் ஜே ஆர் இயக்கியுள்ளார். இப்படம் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மூலம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 8 ஆம் தேதி 2D, 3D, 4D மற்றும் IMAX வடிவங்களில் வெளியாகியுள்ளது.

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர், தனது ஆறு பாகங்களின் மூலம் பிரமிக்கத்தக்க அதிரடி ஆக்ஷன் சாகசத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஏழாவது பாகம், தொண்ணூறுகள் காலகட்டத்தில் நடக்கும் உலகளாவிய சாகசத்திற்கு உறுதியளிக்கிறது. ட்ரான்ஸ்ஃபார்மர்களின் ஒரு பிரிவான மேக்ஸிமல்ஸை இப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவை, ஆட்டோ-பாட்ஸ்களுடன் இணைந்து உலகத்திற்கு எதிரான போரில் பங்கேற்கின்றன. கதையின் களம், ப்ரூக்ளினில் 1994 ஆம் ஆண்டு நிகழ்வதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ எலக்ட்ரானிக்ஸ் நிபுணர் நோவா (அந்தோனி ராமோஸ்) மற்றும் கலைப்பொருள் ஆராய்ச்சியாளரான எலெனா (டொமினிக் ஃபிஷ்பேக்) ஆகியோர் யூனிக்ரான் வருகையிலிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான போரில் ஆப்டிமஸ் பிரைம் மற்றும் ஆட்டோபோட்களுக்கு உதவுவதால் மாக்சிமல்ஸ், ப்ரீடகான்கள் மற்றும் டெரர்கான்கள் இடையே நடக்கும் மோதலில் சிக்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் யுனிக்ரானை பூமிக்கு வரவிடாமல் தடுத்து வெற்றியடைந்தார்களா..? இல்லையா…? யுனிக்ரானின் அடுத்த திட்டம் என்ன…?? யார் இந்த மேக்ஸிமல்ஸ்..?? எனும் பல கேள்விகளுக்கான பதிலை இத்தொடரில் விளக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.