பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில், வனவரின் பாடலை கேட்டு மெய்மறந்து யானை அபிநயா நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகத்தில் அமைந்துள்ள கோழிகமுத்தி. இதன் அருகில் வரகளியார் யானைகள் வளர்ப்பு முகாமும் அமைந்துள்ளது. இங்கு 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோழிகமுத்தி முகாமில் பொறுப்புஅதிகாரியாக பணியாற்றி வருபவர் வனவர் சோழமன்னன். இன்று முகாமில் உள்ள அபிநயா என்ற வளர்ப்பு யானையை குளிப்பாட்டி உணவு அளிக்க பாகன் அழைத்து வரும் போது, அங்கு பணியில் இருந்த வனவர் சோழமன்னன் யானையை நிறுத்தி அதைஉற்சாகப்படுத்தும் விதமாக “என்னவென்று சொல்வதம்ம யானை இவள் பேரழகை” என்றசினிமா பாடலின் மெட்டுகளோடு பாட துவங்கிய வனவரின் பாடலை கேட்ட யானை மெய்மறந்து நின்றது.
இந்த பாடலை பாடிய வனவர் கூறுகையில், யானை அவரது கட்டளைகளுக்கு
மட்டுமே கீழ் பணிகிறது. அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு நம் வனத்தின் காவலனாக
உள்ள யானைகளை வாழ்த்தி பாடும் போது, யானைகள் மனம் மகிழ்ந்து உற்சாகம்
அடைகின்றன. என் பாடலை கேட்டு யானை உற்சாகமாக தலையாட்டி தும்பிக்கை அசைப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று வனவர் தெரிவித்தார்.







