இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி | நியூஸிலாந்து அணி பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.…

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இன்றைய போட்டியில் சர்ப்ராஸ்கான் அல்லது லோகேஷ் ராகுல் யாருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்டில் சதம் விளாசிய சர்ப்ராஸ்கானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் கழற்றிவிடப்பட்டுள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.