டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எலக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்திருக்கிறது. அது தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வோம்.
டாடா நிறுவனம் தனது புகழ்பெற்ற நெக்ஸான் மாடலை எலக்ட்ரிக் அவதாரத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்தது.
XM, XZ+ மற்றும் XZ+ Lux என்ற 3 வேரியண்ட்களில் 15.25 லட்சம் முதல் 16.25 லட்சம் விலையில் இக்கார் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒரு முழுமையான சார்ஜில் 312 கிமீ மைலேஜ் தரும் இக்காருக்கு மக்களிடமும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,000 என்ற எண்ணிக்கையை கடந்திருந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் 2,000 என்ற எண்ணிக்கையையும் இக்கார் கடந்திருக்கிறது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் நெக்ஸான் EV மாடல் புதிய மைல்கல்லை பதித்திருக்கிறது.







