இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் சேமநல நிதி பாக்கித் தொகை!

பணி நீக்கப்பட்ட, அல்லது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேமநல நிதியில் உள்ள பாக்கித் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பணி நீக்கப்பட்ட அல்லது பணியில் இருந்து இடைநீக்கம்…

பணி நீக்கப்பட்ட, அல்லது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேமநல நிதியில் உள்ள பாக்கித் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பணி நீக்கப்பட்ட அல்லது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேமநல நிதியில் உள்ள பாக்கித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு பொது சேமநல நிதி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சேமநல நிதிக்கான பாக்கித் தொகையை வழங்க அதற்கான விதிகளில் இடமில்லாமல் இருந்தது. இந்த நிலையில், அவற்றில் உரிய திருத்தம் செய்திட சென்னையில் உள்ள தலைமை கணக்காயர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று, அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சேமநல நிதிக்கான பாக்கித் தொகையை அளிக்க விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட்டு, இந்த திருத்தப்பட்ட விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், அந்த திருத்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.