அமேசான் அலெக்ஸா Voice assistant-ஐ ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிய முறையில் பெறுவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் அமேசான் அலெக்ஸாவில் ஒரு புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. Echo devices மூலம் லைவ்வாக மொழிபெயர்ப்பு செய்ய முடியும். எந்த மொழியில் பேசினாலும் அதனை நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக் கொடுக்கும்.
இதற்கு முன்னதாக ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் பேசினாலும் அதற்கான சரியான பதில் கிடைக்காது. ஆனால் தற்போது போர்ச்சுகீசு, பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியன், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி Echo devices-ல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அமேசான் வழிமுறைகளின் படி அதன் மொழி, English (US) ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த மொழிக்கு Translate செய்ய வேண்டுமோ, அதனை Echo device-ல் பேசினால் போதும். Echo Show 5-ஐ நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில் திரையிலேயே வந்துவிடும். வேறு வேறு மொழி தெரிந்த இருவர் உரையாடும் போது இது உங்களுக்கு அதிகம் உதவும். அதேபோல் சுற்றுலா செல்லும் போது கூட மொழி பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு இது உங்களுக்கு உதவும்.







