ரஜினியின் புதிய கட்சி: மன்ற நிர்வாகி விளக்கம்

ரஜினியின் புதிய கட்சி தொடர்பாக வெளியாகியுள்ள தகவலுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில், இது குறித்து வரும் 31ந் தேதி…

ரஜினியின் புதிய கட்சி தொடர்பாக வெளியாகியுள்ள தகவலுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில், இது குறித்து வரும் 31ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இந்நிலையில் மக்கள் சேவை கட்சி என்கிற பெயரில், ரஜினிகாந்த் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் விளக்கமளித்துள்ளார்.

அதில் கட்சியின் பெயர் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை, ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply