ஆசிய விளையாட்டு போட்டி : டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.  45 நாடுகளை சேர்ந்த 12 400 வீரர்,…

ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.  45 நாடுகளை சேர்ந்த 12 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபன்னா, ருதுஜா போஸ்லே இணை, சீன தைபேயை சேர்ந்த துசாங் ஹவோ ஹுவாங் (Tsung-hao Huang) என் ஷூ லியாங் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை சீனா 6 – 2 என்ற கணக்கில் சீனா கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடிய இந்தியா, 6 – 3 என்ற கணக்கில் வென்றது. பின்னர் டை பிரேக்கர் சுற்றில் 10 – 4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது.

8-வது நாளான இன்று வரை இந்தியா 9 தங்கம், 9 வெள்ளி 13 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.