அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு…

நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. நடிகர் ரஜினிகாந்தும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று “அண்ணாத்த” படப்பிடிப்பில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த ட்வீட் செய்துள்ள அந்நிறுவனம், படப்பிடிப்பில் சக ஊழியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், ரஜினிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அதில், அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரிசோதனையால் ஐதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply