ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் 1,300 பணியாளர்களை பணிநீக்கம் செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் ஜூம் நிறுவனமும் இந்த பணிநீக்க நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது.
தொற்றுநோய் குறைந்து வருவதால் ஜூம் நிறுவனத்தின் சேவைகளுக்கான தேவை குறைந்துவிட்டதால், ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் 1,300 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
இந்த நடவடிக்கை, நிறுவனத்தின் பணியாளர்களில் கிட்டத்தட்ட 15% பேரை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான், 98% ஊதியக் குறைப்பை கையிலெடுப்பதாகவும், வரும் நிதியாண்டிற்கான தனது போனஸை கைவிடுவதாகவும் கூறியுள்ளார்.
2023 ஆண்டின் முக்கிய பணிநீக்கங்கள்:
அமேசான்: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சுமார் 18,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
சேல்ஸ்ஃபோர்ஸ்: பணியாளர்களில் 10%, சுமார் 8,000 பணியாளர்களை சேல்ஸ்ஃபோர்ஸ் பணிநீக்கம் செய்கிறது.
காயின்மேஸ்: கிரிப்டோகிரணசி வர்த்தக தளமானது சுமார் 950 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
மைக்ரோசாப்ட்: மென்பொருள் நிறுவனம் சுமார் 10,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
கூகுள்: தேடுபொறி ஜாம்பவான் கூகுள் , 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
ஸ்பாட்டிபை: இசை ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான ஸ்பாட்டிபை 400 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
ஏஸ்ஏபி: ஐரோப்பாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான SAP, உலகளவில் 3,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.
பேபால்: டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேபால் சுமார் 2,000 முழுநேர பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது.







