டெலிவரி ஊழியர்கள் ஓய்வு எடுக்க Zomato புதிய முயற்சி! குவியும் பாராட்டு!!

ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato-வில் பணிபுரியும் ஊழியர்கள் இனி பயண நேரத்தின் போது ஓரிடத்தில் ஓய்வெடுத்து கொண்டு மீண்டும் முழு உற்சாகத்துடன் வேலை செய்ய ‘Rest Points’ அமைக்கப்படும் என Zomato நிறுவனத்தின்…

ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato-வில் பணிபுரியும் ஊழியர்கள் இனி பயண நேரத்தின் போது ஓரிடத்தில் ஓய்வெடுத்து கொண்டு மீண்டும் முழு உற்சாகத்துடன் வேலை செய்ய ‘Rest Points’ அமைக்கப்படும் என Zomato நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று Zomato, ஓரிடத்தில் இருக்கும் பயனாளருக்கு அவர்கள் விரும்பிடும் இடத்தில் உணவை பர்ச்சஸ் செய்து குறித்த நேரத்திற்கு விரைவாக சென்று அவர்களிடம் ஒப்படைப்பதே இந்நிறுவனத்தின் முதன்மையான வேலை. இதில் ஆயிரகணக்கான இளைஞர்கள் பணியாற்றி வரும்
நிலையில், அதில் இயங்கி வரும் டெலிவரி பார்டனர்கள் காலை முதல் இரவு வரை நிற்கக் கூட நேரம் இன்றி சரியான நேரத்திற்கு உணவை டெலிவரி செய்வதற்காக ஓடியவாறே இருக்கின்றனர்.

அத்தகைய நேரங்களில் டிராபிக், வெயில் என பல இன்னல்களை அவர்கள் சந்தித்து வருவதுடன் உணவை டெலிவரி வாங்க செல்லும் உணவகங்களில் கூட மனிதாபிமானம் இன்றி கழிவறைகளை உபயோகிக்கவோ, குடிக்க தண்ணீர் தருவதோ கிடையாது என பல
டெலிவரி பணியாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இது இப்படி என்றால் குறைந்தபட்சம் தங்களை சக மனிதர்களாக மரியாதையுடன் நடத்தாத வாடிக்கையாளர்களின் செயல் அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது . இது குறித்த பல பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏராளமாக பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தங்களது டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக Zomato நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அதிரடி அறிவிப்பு சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அது என்னவெனில் Zomato நிறுவனம் சார்பில் அதன் டெலிவாரி பார்டனர்கள் ஓய்வெடுத்து இளைப்பாறும் வகையில் ‘Rest Points’ அமைக்கப்படும் என அந்நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் அறிவித்த செய்திதான். இத்தகைய ‘Rest Points’களில் அதிவேக Wi-
Fi, முதலுதவிக்கு தேவையான கிட் , ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி, கழிவறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் என பல வசதிகள் அங்கு இருக்கும்.

மேலும் Swiggy போன்ற பிற நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களும்
இந்த Rest Points-களுக்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக அவர்களது டெலிவரி பார்டனர்கள் குறித்து அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த தீபிந்தர் கோயல், “எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு கடினமான வேலை இருக்கிறது, மேலும் அவர்கள்
தங்கள் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும் வகையில் பொது உள்கட்டமைப்பு இன்னும் எங்களிடம் இல்லை.

இருப்பினும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ‘Rest Points’ என்பது தி ஷெல்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் மூலம் டெலிவரி ஏஜென்டுகளுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக ஆதரவான பணி சூழலை உருவாக்க முடியும் என Zomato நம்புகிறது. மேலும் அனைத்து டெலிவரி ஊழியர்களும் ஓய்வெடுக்கவும், ரீசார்ஜ் செய்யவும் மற்றும் அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கவும் ஒரு இடத்தை வழங்குவதன் மூலம், அவர்களின் உடல் மற்றும் மன
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த சூழலை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்விற்கு முன்னதாக பணிநீக்கம், 10 நிமிடத்தில் உணவு டெலிவரி போன்ற அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளன Zomato, எதிர்ப்புகளின் காரணமாக பின்னர் பல முயற்சிகளை ஊழியர்களின் நலன் கருதி திரும்ப பெற்றது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள rest points திட்டம், ஊழியர்களின்
தேவையை புரிந்து கொண்டு வரப்பட்டுள்ள நல்ல திட்டமாக பாராட்டுகளை பெற்று வருகிறது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.