“Yes.. I am a Nepo Kid” – ஆடுஜீவிதம் குறித்த பேட்டியில் நடிகர் பிரித்விராஜின் பேச்சு இணையத்தில் வைரல்!

நான் ஒரு நடிகரின் வாரிசுதான் அதனால் தான் எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது என ஆடுஜீவிதம் திரைப்படம் குறித்த பேட்டியில் நடிகர் பிரித்விராஜின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரித்விராஜ் நடிப்பில்…

நான் ஒரு நடிகரின் வாரிசுதான் அதனால் தான் எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது என ஆடுஜீவிதம் திரைப்படம் குறித்த பேட்டியில் நடிகர் பிரித்விராஜின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் .  இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  இந்த நாவலை எழுத்தாளர் பென்யாமின் எழுதியுள்ளார்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆடு ஜீவிதம் திரைப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.  நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  மார்ச் 28-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.

https://twitter.com/PrithviOfficial/status/1776447158268604874

தற்போது ஆடுஜீவிதம் திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆடுஜீவிதம் திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் பிரித்விராஜ் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த பேட்டியில் சினிமாவில் வாரிசு நடிகர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் தெரிவித்ததாவது..

“ நான் ஒரு நடிகரின் வாரிசுதான் அதை சொல்வதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை.  நடிகரான எனது அப்பாவினால்தான் எனது முதல் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முதல் படத்தின் வாய்ப்பு மட்டுமே. அதன் பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே எனது நடிப்பு திறமையால் எனக்கு கிடைத்தவை.

நானும் துல்கர் சல்மானும் நெப்போ கிட்ஸ் தான். எனது அப்பா ஒரு நடிகர் என்பதால்தான் எனது முதல் படத்திற்கு ஸ்கிரீன் டெஸ்ட் கூட எடுக்கப்படவில்லை.” என பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். நெப்போட்டிஸம், நெப்போ கிட் என்கிற சொல் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையான நிலையில் வாரிசு நடிகர்கள் குறித்த பிரித்விராஜின் பேட்டி பலரால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர் பிரித்விராஜ் பிரபல மலையாள நடிகரான சுகுமாரன் மற்றும் மலையாள நடிகையான் மல்லிகா தம்பதியினர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது சகோதரரான இந்திரஜித்,  அண்ணி பூர்ணிமா ஆகியோர் மலையாள நடிகர்கள் ஆவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.