Xiaomi SU7 EV: ஒரு சார்ஜ்ஜில் 800 கி.மீ. மைலேஜ்… இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?

மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமி தனது இரண்டாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.  சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது.…

மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமி தனது இரண்டாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. 

சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தனது புதிய தயாரிப்பான மின்சார காரை அறிமுகப்படுத்தி ஜியோமி நிறுவனம் ஆச்சரியப்பட செய்தது.

ஜியோமி நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் புதிய தயாரிப்பான எஸ்யூ7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர்கார் ஆன மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.

முழுவதுமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீ தொலைவு வரை பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. தன்னிச்சையாக இயங்க கூடிய தானியங்கி ஓட்டுநர், பிரத்யேக இயங்குதளம் (ஓஎஸ்) உள்ளிட்டவற்றை ஜியோமி வடிவமைத்துள்ளது. இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடி வரை இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஜியோமி முதலீடு செய்துள்ளதாகவும் இந்தாண்டு இறுதிக்குள் சீனாவில் கார் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.