32.5 C
Chennai
April 25, 2024
இந்தியா Instagram News

உலகின் சிறந்த 50 சாண்ட்விச் பட்டியல் – 13வது இடத்தில் இந்திய சிற்றுண்டி வடா பாவ்

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள 50 சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் வாடா பாவ் உலகின் சிறந்த சாண்ட்விச்கள் பட்டியலில் பதின்மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் வட் பாவ் ஆகும். மும்பை வாசிகளுக்கும் வடபாவுக்கும் உள்ள உறவு மிகவும் வித்தியாசமானது. மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி, வடை பாவ் தான் பசியை போக்க சிறந்த சிற்றுண்டி. நீங்கள் மும்பையில் மற்றும் மும்பை சுற்று வட்டார பகுதியில் பரவலாக இந்த வடபாவ் கிடைக்கும். இந்த நீங்கள் எந்த நேரத்திலும் வாடா பாவை உண்ணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேநீர் இடைவெலி, காலை உணவு அல்லது மதிய உணவு என எந்த நேரத்திலும் வடை பாவ் சாப்பிடலாம். வடபாவ் மும்பை வாசிகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. தெருவோரமாக இருந்தாலும் சரி, பணக்கார உணவு விடுதியாக இருந்தாலும் சரி, வடை பாவ் என்பது அனைவருக்கும் பிடித்தமான உணவு. இந்நிலையில் மும்பையின் வடபாவ் தற்போது உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகின் சிறந்த 50 சாண்ட்விச்கள் பட்டியலில் வடா பாவ் இடம் பிடித்துள்ளது.

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள 50 சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் வாடா பாவ் உலகின் சிறந்த சாண்ட்விச்கள் பட்டியலில் பதின்மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. துருக்கியின் டாம்பிக் சாண்ட்விச் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்து பெருவின் புட்டிஃபாரா சான்ட்விச்சும், மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவின் டி லோமோ சான்ட்விச்சும் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading