29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள்

உலக உணவு தினம் இன்று: ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன?


யுதி

கட்டுரையாளர்

ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று.  இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை விடுவிப்பதாகும்.

உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும், உலக உணவு தினம் என்பது அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலக உணவு தினம்,  அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

வரலாறு: 

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 1945 இல் நிறுவப்பட்டது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, 1979 இல், FAO மாநாட்டில், உலக உணவு தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அதன்பிறகு,  150-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தன. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து பசியை எதிர்த்துப் போராடுவதும் உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது.

முக்கியத்துவம்:

இந்த ஆண்டு உலக உணவு தினத்தின் கருப்பொருள்:  தண்ணீரே உயிர், தண்ணீரே உணவு. யாரையும் கைவிடாதீர்கள். அனைவருக்கும் நல்ல உணவும் தண்ணீரும் கிடைக்க வேண்டும்.

தண்ணீர் பூமியின் மேற்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியது.  நமது உடலில் 50% க்கும் அதிகமாக தண்ணீர்  உள்ளது.  நமது உணவை உற்பத்தி செய்கிறது மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.  ஆனால் இந்த விலைமதிப்பற்ற வளம் எல்லையற்றது அல்ல.  அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்.

நாம் என்ன சாப்பிடுகிறோம்,  அந்த உணவு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது,  போன்ற அனைத்தும் தண்ணீரை பாதிக்கிறது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளாது.

பசி குறீயீடு அட்டவணை 2023 இல் இந்தியாவின் தரவரிசை:

உலகளாவிய பசி அட்டவணை 2023 இல் 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது, இது கடுமையான பசியின் அளவைக் குறிக்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் (102), வங்கதேசம் (81),  நேபாளம் (69),  இலங்கை (60) ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுவதை  இந்த அட்டவணை நமக்கு நினைவுபடுத்துகிறது.

கடுமையான தண்ணீர் நெருக்கடியை நோக்கி நகரும் இந்தியா

இந்தியா கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.  தனிநபர் நீர் இருப்பு தொடர்ந்து ஆபத்தான விகிதத்தில் குறைந்து வருகிறது.  தனிநபர் தண்ணீர் பற்றாக்குறை 1950 இல் 5000 கன லிட்டரில் இருந்து 2021 இல் சுமார் 1500 கன லிட்டராக குறைந்துள்ளது. ஒருவருக்கு 1,700 கன லிட்டருக்கும் குறைவான நீர் உள்ள நாடு தண்ணீர் பற்றாக்குறை நாடு என்று அறியப்படுகிறது.

எனவே, பாசன நீர் பயன்பாட்டுக்கு பயனுள்ள முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.  இதில், சொட்டு நீர் பாசனம் மற்றும் நுண்ணீர் பாசன முறையில், தெளிப்பானை விவசாயிகள் பயன்படுத்தினால்,  வெள்ள பாசனத்தை விட, 30-50 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.  நுண்ணீர் பாசனத்தை தத்தெடுப்பது உரங்களை சேமிக்கிறது, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சராசரி உற்பத்தி அதிகரிக்கிறது. இது விவசாயிகளின் ஒட்டுமொத்த வருமானத்தை அதிகரிக்கிறது.

பருவநிலை மாற்றத்தில் உணவுப் பாதுகாப்பு எப்படி?

தற்போது உலக மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.  மேலும் 2050 ஆம் ஆண்டில் 9.6 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய,  உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம், ஆனால் மறுபுறம்,  பருவநிலை மாற்றத்தாலும்,  மாறிவரும் காலநிலை காரணமாகவும், அதிக வெப்பநிலை காரணமாகவும் விவசாயம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

அத்துடன் வெள்ளம்,  ஆலங்கட்டி மழை போன்ற வானிலை தொடர்பான பேரழிவுகள் உருவாகின்றன.  எனவே, இன்றைய காலகட்டத்தில் நிலையான விவசாயத்துடன் ஆரோக்கியமான உணவும் அனைவருக்கும் கிடைக்க நிரந்தர வழியைக் கண்டறிய வேண்டியது அவசியம்.  இதற்கு, குறைந்த இடத்திலிருந்து அதிக உற்பத்தி செய்து, சிறந்த அறுவடை, சேமிப்பு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் மூலம் உணவு தானியங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்கில் வீணாகும் தானியங்கள்

கடந்த பத்தாண்டுகளாக உணவு தானிய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  ஆனால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் இங்கு வீணாகிறது என்பதும் உண்மைதான். அரசாங்கத் தரவுகளின்படி, சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் அழிந்து வருகின்றன.

அதே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள்.  2021 ஆம் ஆண்டில், உலகில் 76.8 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கண்டறியப்பட்டனர்.  அவர்களில் 22.4 கோடி (29%) இந்தியர்கள் உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் அதிகமாக உள்ளனர்.

விழிப்புணர்வு :

இதற்காக விவசாயிகளுக்கு மலிவு விலையில் சேமிப்பு தொட்டிகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும்,  இன்றும் பல லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகி வருகிறது.  இந்தியாவில் திருமணம் போன்ற விழாக்களில் உணவுப் பொருள்கள் பெருமளவில் விரயம் ஆவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  எனவே இதுபோன்ற உணவுகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.  அப்போதுதான் பசி என்ற உலகளாவிய பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.  உற்பத்தி அதிகரிக்கும் போது,  அது தொடர்பான மற்ற அம்சங்களும் சமமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading