உலகக்கோப்பை இறுதிப்போட்டி | ஒரு டிக்கெட் ரூ. 8 லட்சம்!! – அதிர்ச்சி தகவல்…

19,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் VIP டிக்கெட்டுகள் 8 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.   மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, இறுதிப்போட்டி குறித்த பரபரப்பு…

19,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் VIP டிக்கெட்டுகள் 8 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.  

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, இறுதிப்போட்டி குறித்த பரபரப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் இடம் உறுதியானதை அடுத்து, நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக நாடு முழுவதும் காத்திருக்கிறது.

இறுதிப் போட்டியைக் காண பலர் அகமதாபாத் செல்ல தயாராகி வருகின்றனர்.இதன் காரணமாக அகமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், விமான டிக்கெட்டுகள் மற்றும் VIP  டிக்கெட்டுகள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

விமான டிக்கெட்டுகள் விலை உயர்ந்து வருகின்றன:

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டி காரணமாக டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான டிக்கெட்டின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான டிக்கெட்டைப் பற்றி நாம் பேசினால், டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு இன்று இரவு 21:25 மணிக்கு விமான டிக்கெட்டின் விலை ரூ.26,217. இன்று மாலை 7 மணிக்கான விஸ்தாரா விமான டிக்கெட் ரூ.30,506க்கு கிடைக்கிறது.

அதேசமயம் இன்று மதியம் 22:15 மணிக்கு இண்டிகோ விமான டிக்கெட்டின் விலை ரூ.33,757. மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு இரவு 21:55 மணிக்கு விஸ்தாரா டிக்கெட் விலை ரூ.46,861. டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு இரவு 7 மணிக்கு விமானம் ரூ.46,861க்கு கிடைக்கிறது. அதேசமயம் 21:20க்கு டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தின் விலை ரூ.72897.

ஹோட்டல் அறைகளின் விலை: 

இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவுடன்  ஹோட்டல் அறையின் விலை ரூ.24,000 ஆக உயர்ந்து. இப்போது அகமதாபாத்தில் ஒரு இரவுக்கு ஹோட்டல் அறைகளின் விலை  ரூ.2,15,000 வரை  உயர்ந்துள்ளது. தற்போது  அகமதாபாத்தில்​​ மிகவும் சாதாரண ஹோட்டல் அறைக்கு ஒரு இரவுக்கு  குறைந்தபட்சம் ரூ.10,000 எனவும்,  நான்கு நட்சத்திர, ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளின் விலை குறைந்தபட்சம்  சுமார் ரூ.1 லட்சம் முதல்  ரூ.2,15,000 வரை  உயர்ந்துள்ளது.

VIP டிக்கெட்டுகள் விலை உயர்ந்து வருகின்றன:

இறுதி போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது. 19,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் VIP டிக்கெட்டுகளை தனியார் தளங்களில் 8 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.