தமிழர்களுக்கு வேலை; என்எல்சிக்கு முதலமைச்சர் கடிதம்

என்எல்சி நிறுவனத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை தந்து, வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்எல்சி நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில்,…

என்எல்சி நிறுவனத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை தந்து, வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்எல்சி நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எம்.எல்.ஏ-க்கள் வேல்முருகன், அருண்மொழித் தேவன் உள்ளிட்டோர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக இயங்கி வருவதாகவும், Recruitement policy மூலம் தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், தமிழ்நாட்டில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் தந்தவர்களுக்கு, ஏற்கனவே தரப்பட்ட வாக்குறுதியின்படி, இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அலுவலக பணிக்கு எடுக்கப்பட்ட 300 பேர்களில் அனைவரும் வெளிமாநிலத்தவர்கள் என்றும், அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு சென்றதால், தமிழ்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யுமாறு என்எல்சி நிறுவனத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் தொழிற்துறை அமைச்சர், செயலாளர், வேளாண்துறை அமைச்சர், தொழிலாளர் துறை செயலாளர் மற்றும் என்.எல்.சி நிறுவன உயர் அதிகாரிகள் ஆகியோர் கூடி ஆலோசித்து, கடலூரில் நிலம், வீடை இழந்தவர்ளுக்கு உரிய நிவாரணம் தருவதுடன், வேலைவாய்ப்பும் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு’

இதற்கு முன்பாக, நெய்வேலி என்.எல்.சி பணி நியமனத்தில் அநீதி நிகழ்த்தப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி., நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், 300 பேர் கொண்ட பட்டியலில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் எனவும், இந்த தேர்வு முறையை நிறுத்தி விட்டு உரிய அவகாசத்துடன், புதிய தேர்வுத் தகுதிகளை அறிவித்து நியமனங்களை மேற்கொள்ளுங்கள் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.