ஐபிஎல் போட்டியில் கோப்பையை RCB வெல்லும் வரை பள்ளியில் சேரமாட்டேன் என ஒரு குழந்தை பலகையை ஏந்தி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடங்கிய நாளிலிருந்தே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு அவர்களால் முடிந்த எல்லா ஆதரவையும் அளித்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் உற்சாகத்திற்கு மத்தியில், இளம் RCB ரசிகரின் க்யூட்டான படம் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது. மைதானத்திலிருந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு குழந்தை பலகையை ஏந்திச் செல்வதைக் காட்டுகிறது. அதில் “ஆர்சிபி ஐபிஎல் வெல்லும் வரை பள்ளியில் சேரமாட்டேன்” என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது.
RCB fans pic.twitter.com/594s2CyCmh
— Dr Gill (@ikpsgill1) April 27, 2023
இந்த படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது மற்றும் சில வேடிக்கையான மீம்களுக்கு அடித்தளமாக அமைந்தது. ஐபில் தொடக்கிய 2007 இல் இருந்து போட்டியிட்ட ஒரு முறை கூட RCB வென்றதில்லை. இதனால் பலர் அந்த குழந்தை இதன் பின் கல்வி கற்க வாய்ப்பில்லை என கேலி செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.







