பிரபல காபி ஷாப் கழிவறையில் ரகசிய கேமரா – பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கபட்டு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் BEL Road பகுதியில் உள்ள third wave…

பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கபட்டு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் BEL Road பகுதியில் உள்ள third wave காபி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்த செல்போனை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டதை அடுத்து போலீஸ் விசாரணை நடத்தியது.

இதையும் படியுங்கள் : கேரளா, தமிழ்நாட்டிற்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை!

அந்த செல்போன், அந்த காபி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்துள்ள third wave நிர்வாகம், அவர் மீது உரிய எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. காபி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.