மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் லீக் சுற்றின் கடைசி போட்டிகள் இன்று நடைபெறுகிறது. குரூப் 1 பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் லண்டன் லார்ட்சில் நடக்கின்றன. இதில் தென் ஆப்பிரிக்கா-வங்கதேசம், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலிய அணி லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்த உலக கோப்பையில் பலம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது. இந்த நிலையில்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்தை வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெரும். இல்லையேனில் தென் ஆப்பிரிக்கா – வங்கதேசம் இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேர வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன




