10-வது மகளிர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 8-வது முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்தி இடையே நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் 2026 மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேபடன் சோஃபி மோலினக்ஸ் முதலில் பந்து வீச்சை செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டகாரர்களான ஆமி ஜோன்ஸ், டேனி வியாட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த இங்கலாந்து பேட்டர்களும் தடுமாறினர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் சிவர் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம். அவர் 58 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் பிரேயா கெம்ப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 150 ரன்கள் எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 151 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜியா வோல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வருடன் கை கோர்த்த லிட்ச்பீல்டு 48 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த எலைஸ் பெர்ரி 13 ரன்களும், கார்ட்னர் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7-வது முறையாக டி20 கோப்பையை வென்று அசத்தியது.




