ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாட உள்ளது.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி, கடைசி பந்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்று நடைபெறும் மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் டாஸ் ஜெயிக்கும் அணி இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை அணிகள் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








