டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை வெளியிடுமா பிரிக்ஸ் கூட்டமைப்பு?

பிரிக்ஸ் கூட்டமைப்பு பதிய நாணயத்தை வெளியிட உள்ளது. அதனால் டாலருக்கு மாற்றாக அமையுமா என பார்க்கலாம். பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு சார்பில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக, “புதிய சர்வதேச பணப்பரிமாற்ற நாணயத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

பிரிக்ஸ் கூட்டமைப்பு பதிய நாணயத்தை வெளியிட உள்ளது. அதனால் டாலருக்கு மாற்றாக அமையுமா என பார்க்கலாம்.

பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு சார்பில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக, “புதிய சர்வதேச பணப்பரிமாற்ற நாணயத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இக்கூட்டமைப்பின் மூலம் மாற்று பொருளாதார சக்தியாக மாற பல கட்ட பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் சரிவு, கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பிந்தைய காலத்திற்கு பிறகு சமீபத்தில் இக்கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக சர்வதேச நிதியம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி சர்வதேச வர்த்தகப் பரிமாற்றம், பண பரிமாற்றத்தில்
புதிய நாணயம் நடைமுறைக்கு வரும்போது, அமெரிக்க டாலரின் தேவை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.