திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு வனப் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைக் காட்டில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் மலையில் உள்ள பல அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் கருகி வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள குரங்கணி மலை ப் பகுதியிலும் இரண்டாவது நாளாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. புலியூத்து வனப் பகுதியில் இருந்து குரங்கணி மலைத் தொடரில் ஹெவி குண்டு என்னும் மலைப் பகுதியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட வனத் துறை பணியாளர்கள் காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். போதிய தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
-ம.பவித்ரா








