முக்கியச் செய்திகள் இந்தியா

ராஜேந்திர பாலாஜி கைது செய்வதில் காவல்துறை அவசரம் காட்டியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய ரிட் மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது வேறு ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை கேட்ட தலைமை நீதிபதி, ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரிக்கப்படும் நிலையில், காவல்துறை இவ்வளவு அவரசம் காட்டுவது ஏன் என வினவினார். மேலும் மனுதாரர் தரப்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய ரிட் மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாபுராய், முத்து பாண்டியன், பலராமன் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடைப்பயணமாகவே நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கன் மக்கள்

Halley Karthik

தமிழ்நாடு அரசுக்கு சீமான் கேள்வி

Saravana Kumar

A++தரச் சான்றிதழை பெற்றது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!

Gayathri Venkatesan