நீர் தர மறுக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகா ஏன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி  

நடப்பு ஆண்டு நீர் தரமுடியாது என கூறிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகா ஏன் செல்ல வேண்டும் ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை…

நடப்பு ஆண்டு நீர் தரமுடியாது என கூறிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகா ஏன் செல்ல வேண்டும் ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ண  சாலை ஜிம்கானா கிளப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
“ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் காமராஜர்.  அவரை போல ஒரு ஆட்சியாளர்  இல்லை என்பது போல அவரது ஆட்சி காலம் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தது.
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கும் விவகாரம் தான் முதல்  தீர்மானமாக இருந்திருக்க வேண்டும். அதேபோல் மேகதாது அணை தொடர்பன தீர்மானமும்   இல்லை. நடப்பு ஆண்டு தண்ணீர் இல்லை என்று தெரவித்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கர்நாடகா செல்ல வேண்டும்?
வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் பேசியதாக கூறுகின்றனர்  அதனை நிரூபித்தால் ஒரு கோடி என்ன ஆயிரம் கோடி கிடைக்கும். அமலாக்கத்துறை,  காவல்துறை, நீதிபதிகளை வேலை செய்யவிட்டால் மொரிஷிசியஸில் செந்தில் பாலாஜி  பதுக்கி வைத்துள்ள அனைத்து பணத்தையும் எடுக்க முடியும்” என அண்ணாமலை கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.