யார் இந்த தாதா சாகேப்? அவரது பெயரில் திரைத்துறையின் உயரிய விருது வழங்கப்படுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்…
சரியாக 100 ண்டுகளுக்கு முன்பு 1913 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் முதல் திரைப்படம் வெளிவந்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய ’ராஜா ஹரிச்சந்திரா’ என்கிற இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் தாதா சாகேப் பால்கே.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெளிநாட்டிற்கு போய் அங்கு எப்படி படம் தயாரிக்கிறாங்க அதுக்கான உபகரணங்கள் என்ன என்பதை பார்த்து கொண்டு பின் இந்தியா வந்து முதல் திரைப்படத்தை எடுத்து திரையிட்டார். இந்த படத்தில் ஆடியோ வராது அடுத்த காட்சிக்கான புரிதலை ஒரு கார்டில் போட்டு வைத்திருப்பார்கள். ’ராஜா ஹரிச்சந்திரா’ என்கிற இந்த திரைப்படம் முதன் முதலில் மும்பையில் திரையிடபட்டது. இதனை தொடர்ந்து 95 திரைப்படங்களை இயக்கியுள்ளார் தாதா சாகேப் பால்கே.
இதன் மூலம் இந்திய திரைதுறைக்கு அவர் அடித்தளம் இட்டார். இதனால் தான் தாதா சாகேப்பை இந்திய திரை உலகின் தந்தை என அழைக்கின்றனர். அதோடு மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை தாதா சாகேப் பெயரில் விருது கொடுக்கிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு, மூத்த பாலிவுட் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த ஆண்டை சேர்த்து இதுவரை 53 முறை விருது வழங்கப்பட்டுள்ளது. இது திரைத்துறையினருக்கான மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதுடன் ஒரு தங்கத் தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். இதுவரை இந்த விருது தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.