மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 முறை கோப்பை வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இறுதிவரை போராடி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்ததின் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஏற்கனவே நியமிக்கப்படிருந்தார். தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கு மலிங்காவையே பயிற்சியாளராக நியமித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் 2008-2017 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
43 வயதாகும் லசித் மலிங்கா தனது பந்துவீச்சில் புதுமையை காட்டி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். மலிங்கா இதுவரை 83 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் இதுவரை மொத்தமாக, 289 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 390 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







